Thursday 28 April 2016

உன் வாசம்..

ஏய்! என் பிரபஞ்சத்தின் மொத்த அழகியே
அறிந்திருப்பாயா
அத்தனை அணுக்களிலும்
உன் வாசம் நான் உணர்வதை- இன்றும்!

நாய்கள் குரைக்கும் சப்தங்கள்
மட்டும் எழும் நடுநிசியில்
நேற்று நானும் எழ கண்டேன்!

பனி ஆந்தை போல்
இறுக்கம் கொண்டு - இருள்களில்
நேற்று நானும் அழ கண்டேன்!

தன் கண்ணீர் தானே
துடைக்கும் வரம் வாங்கிய
வாழ்க்கை!

பலவாறு பகல் வேஷம்
நானும் சூட
கண்ணனென விமர்சிக்கபடுகிறேன்!
கர்ணன் நான் என கூறாமல்..

காதல் வஞ்சத்தில் வீழ்ந்தேன
கல்யாண மஞ்சம் மறந்தேன!
வாழ்வை துறந்தேன!

வீண்பொழுதுகள்
என்றேனும் வரக்கூடுமாயின்
சற்றேனும் நாட்கள்
பின்னோக்கி பயணித்து பார்..

காண உருகும் பனித்துளி நீ!
சூரியனை குளிரூட்டினாய்!
கரைந்து குறைந்த சூரியன்
சுயம் மறந்து சுற்றம் துறந்திந்த
அனாதை பயணம்!

நம் நெடு தூர பயணத்தில்
பூத்திருந்த நிகழ்வுகள்
இன்று சாயம் போன
காய்ந்த சருகுகளாய்!

ஏய்!
என் பிரபஞ்சத்தின் மொத்தமே
உணர்ந்திருப்பாயா
நிலாக்கால நினைவுகளென
உன்  வாசம் இன்றும் என் சுவாசத்தில்! 

No comments:

Post a Comment