Tuesday 31 May 2016

அணைந்து போகிறது..!



எதார்த்தம் மீறி 
எத்தனித்த தருணங்கள் 
எதிர்பார்த்து காத்திருந்த கணங்கள்!

ஏமாற்றங்களும் சோகங்களும் 
ஏக்கங்களும் - ஒன்றிணைத்த 
உணர்வுகளின் உந்துதலை  
உதறி தள்ளிய என் வேகம்..

இருக்கைகள் இடையில் 
இருகைகள் 
இணைந்தாட -அனைத்தும் 
மீறிய உன் பார்வையில்..

திமிறிய என் மனம் 
சிக்கி சிறிதே தள்ளாடி 
அணைந்து போகிறது 
உன் அணைப்பில்!

Friday 27 May 2016

அழகியல்!!


முறைப்படி அழகியல் 
பட்டம் எனை தானே
சேர வேண்டும்!
வருடங்கள் பல கடந்தும்
தினமும் அழகி உன்னை 
படித்து வருவதால்!

Thursday 26 May 2016

காதலின் ஒளியோடு!


வான் நிலவென தூரமெனவெ
நீ இருந்தாலும் 
என் விழியோடும் 
வழியோடும் 
தான் வருகிறாய் எப்பொழுதும்-
நடைபோடுகிறேன் நானும் 
உன் காதலின் ஒளியோடு!

இதழோடு மின்னும்!!



போ நீ என உன் வார்த்தைகள் சொல்லும்
வா என்று உன் விழிகள் சொல்லும்
மெதுவாய் எனை கொல்லும்..!

இன்னும் சொல்லாத வார்த்தைகளோ
உன் இதழோடு மின்னும்..
நான் பருகி உணர!!



காதலின் அளவுகோல்!!


ஏய் அழகியே!
காதலின் அளவுகோல் நீ..
உன்னில் ஊற்றி அளக்கப்படும்
திரவம் என் காதல்!

உன்னோடு அடங்கிபோகிறது 
என் காதல்!

Thursday 19 May 2016

Tears rolled out of Eyes Not for Missing her; to have a friend like you- Thanks Shakti!!

Dear ABC,

   Hope you have heard my name SHAKTHI from your Senthil. Am really sorry first for writing this mail, sure as a third person, i cannot interfere i know. My relationship is less experienced with him and i became lifetime close to him not only for a beer but for his kindness heart and lovable affection.And so, ofcourse his LOVE is also close to my heart and so excuse me pls and accept this mail.

   First of all, sure this is not a advise mail and torture mail, so pls dont ignore it. I know, You have lovely ears to hear a third person talking abt your love as it is something special. Unfortunately i had to heard about your recent misunderstandings and I was very sure on how it was happened with you. I can understand definitely your privacy was disturbed and your disturbed mind wanted some rest.

   You and your age was young when you two started your love and so your love was also young. Since it was young, it has got affectionate and relaxed relation which we will see it as always enjoyable and entertaining. It is first and fresh love came from heart and brain and it cant be replaced by any kind of later or past relation. But when you and your age grows, your love also grows and becoming aged. Ofcourse it becomes matured and its freshness goes down. Its not like, your love and affection decreases, but your commitment with life increases and you have less time to spend on your love. This gap, please don’t think and relate it to your love and it is definitely coz you are growing good. Also don’t use this gap to disturb your mind from your love.

   Till 20 we are in parents hands and we don’t have any idea about life. 20-25 you can think of your life and if you get a love, you can njoy this period happily. Later after 25 you will be forced to think of marriage. Your love is in third stage and its in Marriage stage. If you are in with parents for 25 years, you are going to be with your partner for remaining life (More than 25 years). So life with our partner and kids are more and any relation having physical presence will change our life. Do not get confused with just misunderstandings and do not think these misunderstandings will make you to lose your happiness. Sure, we are having misunderstandings with our own parents or siblings, but we don’t think to stay away from them. Just like, once we loved, we should not think of breaking it simply coz of misunderstandings alone.

  I hardly spend a 5 mins of chat in a day with Senthil and some day even i wont. But with my experience itself, i see him as a close friend means, what can i talk about your experience of love with him. I really see you both in Marriage stage after crossing your love stage. I was really thinking like, he is just kidding when he said your love has got some disturbance.
Later when he tried to explain the reasons, really there were no reasons at all to say. But i understand clearly from your side, it is because of his expectations to have you as like earlier he was having you. But when your ambience changes, people around you are changing and your office commitment is changing. Sure he should have to understand the situation and relaxed you later.

 But he expected you to be like same as with previous environment. When your timings and his timings were not in the same line, this expectation was later causing regrets and misunderstandings. Basically, you know most of the relation are getting hurt because of failure in expectations. Some will understand it and ignore it simply and proceed casually.But some will get disturbed and hurt deeply when this expectation fails. Just think these kind of mistakes as just a human mistakes from his side and you can easily come out of your confusions.

 Not only me and all of his friends and most of his relatives know about your valuable love and all are really eager to see your marriage. Now you are being forced and approached to decide on your marriage I know. You are on your own now but just postponed your decision. When a relation comes to us on a depressed circumstances will not be with us for a long time.Just im requesting you to relax with your old close friends and think of your marriage after some atleast 3 months. If you already showed any progress on your marriage, donot hesitate please to hold it. Just think as you are sick now and you need sometime to get cured.

 Simply when there are no big reasons to think, you don’t give up your love and your life will be most enjoyable with all kind of expectations fulfilled and happiness.I meant your love as both of your love and its for him also. I advised him too a lot as to treat you as special girl anytime and to give respect to your wishes and thots too.It can be parents and with you and him, anyway all are individuals having diff heart and diff thots. So even if it is lovers, we should also think on her njoyment in life.

 I controlled and still i put few advises, im sorry but all these i said because, i lost my closest heart in the same situation before and she is no more in my life and i feel crying all the days for the last few years. I dint try above to support his side, just i felt very sad to see your good valuable relation has some problem and i wanted to help my friends both of you.

 Above all our tries and centiments, he didnt listen to us and he cannot come out of your heart and so he walked out back to his native or somewhere we donno. We all are sad to lose him as he is not at all talking to us good. I traced your mail id and writing this. Requesting you my sister to call him back and bring him back to his real life with you and also help him on his career too.

 Thanks for reading this mail and you can call me to 9940455467 to scold me if you feel to.

 Your love never ends till we die.

Tuesday 17 May 2016

இடைவெளி..!

சில
நல் உள்ளங்களின்
நலம் விரும்பிகளின்
கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து
சில காலங்களுக்கு
என் சோகங்களை
இனி கவிதையில் அரங்கேற்றுவதில்லை!

வாழ்வின் கடைசி படிக்கட்டுகளில்
பயணம் செய்யும் நானோ
சோகங்களை பொதியெனவெ
எங்கும் சுமந்து செல்கிறேன்!

சிறிது இடைவெளி விட்டு
மீண்டும் வருகிறேன்!

வாழ்வின் வலிகள் உணர்த்தும்
கவிதைகளோடு!

முகவரிகள் தொலைத்த முகம்!


அந்தி வானோடு சூரியன் தழுவ
தேய்ந்த மாலை நேரமது
தழுவிய காதலோ கை நழுவ 
தோய்ந்த முகமது நமது!

வழக்கம் மீறிய வேகம் என்னோடு!
விரைந்து வருகிறேன்
யார் விழியோடும் விழாமல் 
உனை பார்க்கவே!
எங்கெனில் ரயில் நிலையம்!

எதற்கெனில் 
உன் திருமணதிற்கு 
உன்னை வழியனுப்ப!

சுவாசம் கேட்டு பதறும் இதயம் 
படபடக்கும் இமைகள் 
பரிதவிக்கும் மனசு
சிதறும் சிரிப்பு 
பிரியும் உயிர்
பலனற்று திரியும் நான்!

வார விடுமுறைகளை கூட 
பிரிவேன எண்ணி 
பெருந்துயர் கொண்டு 
கலங்கிய உன் கண்கள் அன்று!

போதும் என சொல்லும் அளவிற்கு 
கால அவகாசம் வாய்த்திருந்தும் 
தொலைநோக்கு பார்வையின்றி 
பாவை நீயும் 
பாவி நானும்!

இயல்புநிலை மறந்து 
குழப்பநிலை மனதோடு  
நாளைய நாட்கள் இன்றாக 
நாளடைவில் நானும் தான் 
பழகி போனேன்!

பழகிய காலங்கள் 
நெருங்கிய இரு மனங்கள்
பிரிவின் தொடக்கத்தில் இன்று!

நேற்றைய இரவில் 
நெரிசல் மிக்க சாலையில் 
பிரிவின் சோகம் சேர்த்து
ஓலமிட்டழுகிறாய் -என் தோள் சாய்ந்து!

சமாதானங்கள நான் கூற 
சம்மதங்கள் கேட்டு 
வினா தொடுக்கிறாய்!

நாவிழல் வந்து என் நா அடைக்க  
பொய்யாமொழி நானோ 
நம்பிக்கை சொல்லி 
உறுதிமொழி தருகிறேன் 
நம் இறுதி மொழி இது என 
தெரியாமல்!

கொஞ்சம் கெஞ்சி 
கொஞ்சம் கொஞ்சி 
தேற்றுகிறேன்!
கண்ணீர் துடைத்து  
ஓர் நீள நெற்றி முத்தம் இடுகிறேன்
முடிவில்!

சோகம் தாங்கிய சிரிப்போடு நீ
சிரிப்பின் முகமூடியோடு நான்!

உன் நெற்றியின் இளஞ்சூடு 
இன்றோடும் என் உதடுகளில்!
சற்று கண்ணாடி உற்று நோக்கி 
நீயும் தொட்டு பார்
இருக்கும் இன்றும் உன் நெற்றியோடு 
என் உதடுகளின் ஈரம்!

முன்னோக்கி நீ நகர 
வீட்டு வீதி வரை வந்து 
விட்டு திரும்புகிறேன்!

திரும்பி எனை பார்த்த 
உன் விழி பார்வை!
எக்கணம் கிடைக்கும் இனி!
நகராமல் நின்று விடு காலமே 
இக்கணம்!

கோமாளி நானோ 
ஏமாளி தானே எப்பொழுதும்!
என் சோக கீதத்திற்கு ஏற்ப 
தண்டவாளங்களோடு  
தாளமிட்டபடி நம்மை பிரிக்கும் 
உனக்கான ரயில்..

மூச்சிரைத்து நிறுத்தம் காணுகிறது 
இளைப்பாற!
என் முகம் தேடி நீ வாட  
நெருங்கி வருகிறேன்
கவனமென உன் கை தொடுகிறேன்..! 

பேசிட வார்த்தைகள் அற்று 
ஊமையாகி போன நாம்!
நான்கு கண்களும்  நகராமல் 
உயிர் விட போகும் 
மொத்த காதலின் 
மிச்சத்தை பரிமாறும் 
இறுதி மணித்துளிகள் அவை!

அழுகை சோகம் 
ஆற்றாமை இயலாமை 
என கண்கள் பேசிய உணர்வுகள் ஆயிரம்!

வேடிக்கை தானே!
நம் இருவரின் கடைசி சந்திப்பு 
அது என தெரியாத 
அறிவிலிகளாய் நீயும் நானும்!

தூரத்தில் பச்சை வண்ண கொடி 
அசைய கண்டேன்!
நகர கண்டேன் என்னை விட்டு 
தூரத்தில் உன்னை கொண்டு போக போகும் 
ரயிலும்!

பொடி நடையோடு வேகம் 
கூட்டி நானும் மூச்சிரைக்க 
நானும் தொடர்கிறேன்
பாதையோர நடைமேடை
முடியும் வரை!

இன்றைய 
நிகழ்வுகள் நிஜங்கள் 
யாவும் நினைவுகளாகிவிடும்- 
நாளை நீ ஊர் சேர்கையில்!

வரப்போரத்து புல் நானோ 
களை பிடுங்கபடுவேன் 
உன் வாழ்கை வயல்களில்!

இனிக்கும் பசுமை நினைவுகளோடு 
நெஞ்சில் நீடித்து நிழலாடும் 
இக்காதல்காலம்!

இனி எங்கெங்கு எதிர் காணினும் 
அறியா முகமமெனவே 
கண்ணீர் விழுங்கும் 
கண்களோடு கடந்தாக வேண்டும் 
காதல் முகவரிகள் தொலைத்த 
நம் முகம்!

Monday 16 May 2016

மாற்று வழி..!


உயிர் பிரிய மாற்று வழி
ஒன்று வேண்டுமெனில்
காதலித்து தோற்றுவிடு!

கண்ணாடி பிம்பமென
உன் எதிரே உன் உயிர்
சில்லுகளாய் உடைய
காண்பாய் நீ..!

Friday 13 May 2016

புது விடியல்!!!



திருநீறு மறந்த நெற்றியில்
சந்தன குங்குமம் இன்று!

சடங்குகளுக்காக வாழ்ந்த
நானோ சடங்குகளின்
நாயகன் ஆனேன் இன்று!

அடுத்த ஐந்தாண்டு தமிழகத்தின் ஆட்சி
என் வாழ்நாள் மிச்சத்தின் சாட்சி
யாரிடத்தில்
தேர்வு நாள் இன்று!

மறந்தே போகட்டும்
அவளோடு நான் கடந்த காலங்கள்!
மறைந்தே போகட்டும்
அவள் கால் தடங்கள் யாவும்!
உன் வருகையில் இன்று !

புது விடியல்
நான் காண்பேன்
இனி உன் விழிகளில்!

-----It's not for me.. Dedicating to a Friend.

பெருமழை...!


யாரும் காணாத
பெருமழை ஒன்று
வர கண்டோம்
நீயும் நானும்!

காணும் நிலம் யாவும்
நீராகி போக - இரு கரையோடு
தூரம் ஆகிறோம்
கண் மறைகிறோம் !

என் வாசல் கதவோடு
ஆசை கதவு அடைக்க வழியின்றி
ஓடம் போல் தள்ளாடும் மனம்!!

நீரின் அலைகள் என் நாடிபார்க்க
நாடித்துடிப்போ காணமல் போக
நீள  நீர் பெருவழியில்
நீந்தி வருகிறேன்
தண்ணீர் பாம்புகள் தாண்டி
உயிர் ஏந்தி வருகிறேன்
என் முகம் நீ காண!

வாடிய உன் முகமோ
பூந்தளிரென மலர
விடை தந்து வெளியேறி
கண்ணோரம் பெருமழை வென்னீரோடு
திரும்புகிறேன் மழை நீரோடு!

Thursday 12 May 2016

சிறு குழந்தையெனவே!!!


இரவுகளில் மின்னும்
வெள்ளி கம்பிகள்
காதோரோம் படறிய
வயதோடு!

சிறு குழந்தையெனவே மாறி
விளையாட விரும்பிகிறோம்
நீயும் நானும்!

உண்மையெனில் என்னோடு சொல்லிவிடு
இல்லையெனில் உன்னோடு வைத்துக்கொள்!

உன் அன்பு மறவேன்!!

ஒரு நாள் முழுதும் விடுமுறையில் 
உன்னோடு செலவழித்த நிமிடங்கள்
முடிந்து பிரிகையில்..

பிரியும் சோகம் தாளாமல்
உன் சிரிப்பு சிறிது
கடன் வாங்கி செல்கிறேன்!

திரும்பும் வழியில்
புரிகிறது உனது சிரிப்பிற்குள்
புதைந்திருக்கும் வலிகள்
நம் பிரிவு எண்ணி!

எத்தருவாயிலும்
உன் அன்பு மறவேன்
நீயே எனை பிரியும்படி நேர்ந்தாலும்!

சிறகுகள்!.....



ஏதோதோ எழுத நினைத்து 
என் பேனா நான் எடுக்க 
உன் பிரிவின் துயரம் சொல்லும் 
கவிதையோடு 
சிறகுகள் மூடி கொள்கிறது
என் கற்பனைகள்! 

சோகத்தின் விடியல்கள்!!!


என் பாவம் செய்தேன்
ஏன் பாவமாய் ஆனேன்..
பாவம் தானே பாவையே நானும்!

பெருந்திரள் கூட்டி
கழைக்கூத்து ஆடி
விண்மீன் தொலைத்த வேடன்
நானும்!

முகமலர்ச்சி மனமகிழ்ச்சி
தொலைந்தே போன
நானும்!

நாளை வரும் துன்பங்களுக்கு
இன்றே அழுதல் தொடங்கிடும் மனதை
என் செய்வேன் நானும்!

விடியல் இல்லா ஒரு நல்
இரவு வேண்டியே
தினமும் நானும்!

சோகத்தின் விடியல்கள்
என் வாழ்வின் முடிவினில் தானோ!
பாவம் தானே பாவையே நானும்!

Tuesday 10 May 2016

அறிவாய் நீயும்!


பனி படர்ந்த இருள் கவிழ்ந்த
பயம் அடர்ந்த ஓர் காரிருளில்
கனவெனவே கலைந்து போனாய்
தனியனவே எனை தவிக்கவிட்டு!

அறிவாய் நீயும்!
மீண்டு நானும் வருவேன்
உனை காணவே!

நாள்காட்டி!


தினம் இரவுகளில் வருகிறாய்
கனவுகளில் உலவுகிறாய்
உறக்கம் திருடுகிறாய்!

விழிக்கையில்
நினைவுகளாய் நிழலாடுகிறாய்
நிஜத்தினில் மட்டும் எனை
ஏனோ கொல்கிறாய்!

என் வாழ் நாள் அர்த்தம் உணர்த்திய
நாள்காட்டி நீ - கடைசி தாள் பிரிக்கிறேன்
யாவரையும் பிரிகிறேன்! 

Monday 9 May 2016

நாணல்!!




வறண்டு போன என் பாலைவன வீதிகளில் 
நீர் கசிய காண்கிறேன் 
உன் அன்பில் அரவணைப்பில்!

விதிகள் பல வகுத்து நீள 
நேர்க்கோடிடுகிறாய்.....

வெள்ளத்தோடு வளையாத 
காட்டு மூங்கில் நானோ.. 
நாணல் போல் வளைகிறேன் 
உன் வளைவி சத்தத்திற்கே..!

மொத்த அன்பு திரட்டி  
பூப்பந்தென உருட்டி 
எறிகிறாய் என் மேல் - 
நொறுங்குகிறேன்  நான் 
நெருங்குகிறோம் நாம்!

குறைவே ஆயினும் நிறைவாய் இருப்பதாய் 
எண்ணி நிறுத்துகிறேன் இத்தோடு 
என் கவிதையை மட்டும்!

Saturday 7 May 2016

தலையணை தாலாட்டுக்கள்!!!


உனது இசை மெட்டுக்கள்
என் தலையணை தாலாட்டுக்கள்
தினமும்!

என் எல்லா மன நோய்க்கும்
உன் இசை ஒன்றே மருந்து!

இனிமையான தூக்க மருந்து!

Friday 6 May 2016

ஒற்றை காலணி


வழி நெடுகிலும் உன் பூம்பாதங்களின்
பாதுகாவலனாய் நான்

காதல் இலக்கணம் மீறி
தாலி கட்டிய
புதுபெண்ணாய்  இக்கணம் நீ.

இனி பூக்களோடு
பூபாளம் பாடட்டும் உன்
பூம்பாதங்கள்
உன் வழிகளில்!

மேடை அரங்கேறாத என் காதல்
ஜோடி இழந்த ஒற்றை காலணியாய்
உன் திருமண வீட்டின்
வாசலில்- நான்!

ரேகை...


அழிந்தே போனதாய் எண்ணிய
இரு வேறு பாதை கொண்ட
உள்ளங்கை ரேகைகள்
வளர கனா கண்டேன்
வியந்து விழித்தேன்!

கல்யாண ரேகையோடு
ஆயுள் ரேகையும்
றெக்கை கட்டி  வளர்வதாய்
கனா கண்டேன்.
உறக்கம் தொலைத்தேன்!

மனதோடு புது ஆசையின்
ஓசையும் கேட்க கண்டேன்!

என்னில் பாதியாய் ஒரு பதி
தோள் சாயும் தோழியாய்
கை கோர்த்திடும் காதலாய்!
மனம் பேசும் வார்த்தைகளை
உதடுகளில் உச்சரிக்கும் உயிராய்!

ரயில் தண்டவாளத்தோடு
தனித்திருக்கும் ஒற்றை
பனை மர வாழ்வு போதுமே!
நல் துணை தேடும்
என் ரேகைகள் - உனை போலவே!