Thursday 28 April 2016

நிழலாடுகிறது!


எதிர்பாரா நிகழ்வுகள்
எப்போதேனும் அரங்கேறும்
எங்கேயோ செவிவழி
கேட்ட கூற்று..!

சில மாதங்கள் சென்று
உன் பெயர் எழுதிட
நேர்கையில்
நிழலாடுகிறது அக்கூற்று!

தேர்ந்த நடிகன் தான் ஆயினும்
கண்ணீர் ருசித்த சிரிப்போடு
உன் பெயர் ரசித்து நான்! 

தேநீர் கோப்பை..!


காது மடல்கள் கூசிடும் 
இதமான பனிகாற்று
உள்ளங்கையில் இளஞ்சூடான 
தேநீர் கோப்பை 
உன் நெருக்கத்தின் வெப்பம் 
தனிமையில் உன்னோடு பொடி நடை!

நம் தனிமை தொலைந்த 
சில நாழிகைகள் - யாதும் மறந்து 
உன் தோள் சாய்ந்து நான் !

உன் வாசம்..

ஏய்! என் பிரபஞ்சத்தின் மொத்த அழகியே
அறிந்திருப்பாயா
அத்தனை அணுக்களிலும்
உன் வாசம் நான் உணர்வதை- இன்றும்!

நாய்கள் குரைக்கும் சப்தங்கள்
மட்டும் எழும் நடுநிசியில்
நேற்று நானும் எழ கண்டேன்!

பனி ஆந்தை போல்
இறுக்கம் கொண்டு - இருள்களில்
நேற்று நானும் அழ கண்டேன்!

தன் கண்ணீர் தானே
துடைக்கும் வரம் வாங்கிய
வாழ்க்கை!

பலவாறு பகல் வேஷம்
நானும் சூட
கண்ணனென விமர்சிக்கபடுகிறேன்!
கர்ணன் நான் என கூறாமல்..

காதல் வஞ்சத்தில் வீழ்ந்தேன
கல்யாண மஞ்சம் மறந்தேன!
வாழ்வை துறந்தேன!

வீண்பொழுதுகள்
என்றேனும் வரக்கூடுமாயின்
சற்றேனும் நாட்கள்
பின்னோக்கி பயணித்து பார்..

காண உருகும் பனித்துளி நீ!
சூரியனை குளிரூட்டினாய்!
கரைந்து குறைந்த சூரியன்
சுயம் மறந்து சுற்றம் துறந்திந்த
அனாதை பயணம்!

நம் நெடு தூர பயணத்தில்
பூத்திருந்த நிகழ்வுகள்
இன்று சாயம் போன
காய்ந்த சருகுகளாய்!

ஏய்!
என் பிரபஞ்சத்தின் மொத்தமே
உணர்ந்திருப்பாயா
நிலாக்கால நினைவுகளென
உன்  வாசம் இன்றும் என் சுவாசத்தில்! 

Friday 22 April 2016

நிலா இரவில்..




நிலா இரவில் 
நம் இருவரின்  தனிமையில்..

முன்னொரு நாளில் 
நடு முதுகினில் குத்தப்பட்ட 
என் காதல் கா(வி)யம் 
உரையாடினோம்! 

அன்போடு அரவணைத்து 
நிகழாது இனி 
ஒரு பொழுதும் என்றாய்!

நிலா இரவில் 
நம் இருவரின்  தனிமையில்..

கலங்கிய காதல் கண்களோடு 
பிரிவோம் என நீ அடிக்கோடிட்டு
சொன்ன வார்த்தைகள்  
ஒவ்வொன்றும் 
தேர்ந்த வாள் வீச்சுகள் 
என் நெஞ்சில்!

வாக்கு நிறைவேற்றினாய் 
நன்கெனவே! 
முதுகின்றி நெஞ்சாகி போனது  
இம்முறை!

நிலா இரவில் 
தனிமையில் நான்..
கலங்கிய காதல் கண்களோடு!

Thursday 21 April 2016

உச்சாணி கொம்பேறி!!



உச்சாணி கொம்பேறி 
ஊருக்கெல்லாம் நேசப்பட்டு 
ஊர் முழுக்க கண்பட்டு! 

சமதர்மம் பேசி 
என் சமயோகிதம் தொலைத்தேனே!

காசும் தான் சேக்கலையே
காதலும் தான் கூடலையே..

சேர்த்து வச்ச சொத்தெல்லாம் 
காதலுனும் - அன்பென்ற 
ஒன்று அணையாது என்றும்..

கருத்து பேசி 
எதிர்காலம் தொலைத்தேன்..  

வெட்டுப்பட்டும் 
கட்டுமரமாகி  கடல் சென்றேன்!

காரிருளில் கடும்புயலில் 
ஆழிபேரலையாய் எழும் அலைகளில் 
கட்டுமரம் நிலைகுலைய...

வந்தோர் எல்லாம் பத்திரமா கரை சேர 
கட்டுமரம் மட்டும் நொருங்க 
வாழ்கை நியதி அறிய கண்டேன்!

உச்சாணி கொம்பேறி 
ஊருக்கெல்லாம் நேசப்பட்டு 
ஊர் முழுக்க கண்பட்டு!

அத்துவான காட்டில் 
ஆகாச மேட்டில் 
அச்சாணி கழன்று 
நேசம் தேடி திக்கத்து நிக்கிறேன்..!

மனிதம் வீசி எறிகிறேன்!!


அக்னிப்பிழம்பு ஒன்று
என்னுள் ஆறாது எரிய கண்டு
மனிதம் வீசி எறிகிறேன்
அதனுள்!!

கடந்து வந்த யாவும்
முற்றும் கலைந்து போனது
என்னை துளைத்து போனது!

துணைப்புள்ளி யாருமின்றி
ஒற்றை புள்ளியென
முற்றுமாய் நான்.

ஆசைப்பெருக்கம் கொண்டேன்
நீள் வளர்ந்த நகக்கண்கள்
நறுக்கிட!

கிளை ஒடித்து
வேர் அறுத்து
சலசலக்கும் ஆற்று நீர்
நனைத்து
மீண்டும் விதைக்கணும்
நான் புதிதாய் முளைக்கனும்!!

நடுவிடம் சேரணும்!



மூடுபனி கவிந்த விடியலில்
வெண்பனியோடு சரசம்
கொள்ளும் என் மேனி!

பதின்மன் பருவமெனில்
அதீதம் ஆயிரம்!

உப்பங்கழி நீரென
நடுவிடம் சேராமல்
ஒதுங்கியே!!

சிறப்பு என்பதா
என் பிறப்பு என்பதா!

புலனாய்வு கொள்ள 
புலன்களுக்கு
உயிர் இல்லை!

ஞாயிறு உறிய கரைகிறேன்
காலக்கடிகாரம் கடந்தேரனும்
மாரியென மாறி
நானும் பொழியனும்

மலைகளில் உருண்டோடி 
நதிகளில் நனையனும்
சலசலக்கும் ஆற்றில் ஆர்ப்பரிக்கணும்
நடுவிடம் சேரணும்!

Thursday 14 April 2016

காதல் பரமபதம்...!


ஒவ்வொரு முறையும்
ஏற்றம் பிடித்து ஏணியில்
ஏற -

பரமபதமென
காதல் பாம்பு தீண்டி
விஷம் ஏறுகிறது
உடலெங்கும்..

விழுகிறேன் தலைகீழாய்
தொடங்கிய இடம்தனிலே.!

மனம் ஏதோ சொல்ல
ஏறுகிறேன் ஏணியில்!

கவனமென இம்முறை
காதல் பாம்புகள் இல்லா
பரமபதத்தில்! 

உறவு...!



மறக்கவும் முடியாத
மறுக்கவும் முடியாத
துறக்கவும் முடியாத
என்னுள் உறைந்த
உறவு நீ மட்டுமே!!

வலி!!.....


உயிர் வலி தந்த போதிலும்
உயிரென எண்ணுவது
தாய்மையும் காதலும்
மட்டுமே...

காரணியாய் செயல்படுகிறேன்..!


பறந்து போகிறேன்
வினா எழாமல்
இல்லை - என்னுள்..

வெறுப்பு இல்லை- அஃது
ஒரு விருப்பமும் இல்லை
என்பது யாவரும் அறியும் மெய்..

பின் ஏனிந்த பயணம்!

மறுப்பு சொல்ல முடியா 
காரணம் கொண்டு
காரணியாய் செயல்படுகிறேன்..!

கடந்து சென்ற காற்றில்
என்னுள்
கலந்தவைகளை
கலைந்தவைகளை
களைந்துவிட!

ரணம் தாங்கி
எடுத்து வைக்கிறேன்
அடுத்த அடி!

நானறிய என் கோணம்
தவறு இல்லை!!
மற்றவை அறிவான் - யாவும்
அரங்கேற்றும் பராபரமே!

Friday 8 April 2016

நிறைந்தது!!




சொந்தங்களின் பந்தலில் 
தனியெனவெ வாழ்ந்தாய்! 
தமையனின் பாசத்தில் 
தாய் தந்தை கண்டாய்..!

தனியென விட்டு 
தமையனும் பிரிய- யாருமன்றி 
தடைகள் தாண்டினாய் - தனித்தே!
தனித்துவம் கொண்டாய்..

கடந்து வந்த கர்ம காலங்களில் 
உன் கால்கள் சிறிதும் 
தடு மாறவில்லை 
தடம் மாறவில்லை! 

பாதைகளின் கடினங்களில் 
பாதங்கள் பழுதடயவில்லை!

மிரட்சி கொண்டதில்லை 
உன் விழிகள்! 
வரட்சி கொண்டதில்லை 
உன் இதழ்கள்! 

அடையும் இலக்கு நேர்கொண்டு 
பயணித்தாய்! 

தனித்தவம் கொண்டாய் 
இத்தனை நாட்களாய் 
இத்துணை சேரவே!

இன்று பூப்பந்தலில் 
உன் பாதங்கள் 
புது மலரனவே!

பூமாலை சூடுகிறாய்..!
புதுமனை புகுகிறாய்!

நிறைந்தது- 
என் மனதின் கணமும் 
உன் வாழ்வின் ரணமும்!
உடன் வருவேன் நட்போடு 
உயிர் தோழன் எனவே!!

Thursday 7 April 2016

எப்பொழுதுகளிலும் ஒற்றை நிலவென நீயே என் வானில்!




கட்டவிழ்த்து விடப்பட்ட 
காங்கேயங் காளையென 
குதித்தோடி வரும் என் கண்கள் 
உன் திசை பார்த்து - தினந்தோறும்! 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

தனிமையில்  இரவில் - 
தலையனை நீயாக..
ஒத்திகைகள் ஓராயிரம் 
என் காதல் ஒப்புவிக்க..

கணக்குகள் நினைவில் இல்லை 
எதிர்பார்த்து காற்றோடு காத்திருந்த நாட்கள்..
காதல் உரைக்க எத்தனித்த தருணங்கள்..

எதிர் உன்னை பார்க்க 
ஊமையாகிறேன் பேதை நான்!

எப்படி அப்படி ஓர் அசட்டு 
தைரியம் என்னுள்..
புரியாத புதிராய் இன்றும்!!

மன ஆசை தொடுக்கிறேன் 
அழகாய் மறுத்து - உன் பாதை 
தொடர்கிறாய் !

வலிகள் இருந்தும்..
உன்னை ரசித்த வண்ணம் நான் !

நட்சத்திரங்கள் காணாமல் போக 
முழு நிலவென ஒளிர்கிறாய் 
என் வானில் அன்று!!

தயக்கம் கொண்டு 
தவிர்த்தே வருகிறேன் 
மறுமுறை உன்னிடம் வர..

காத்திருக்கிறேன் நான்!
காலம் கரைத்திடாதோ எண்ணி.
குருட்டு நம்பிக்கையில்..!

நாட்கள் நகன்றோடி
வருடங்கள் ஆயிற்று பல 
இன்றோடு!!

மருகி போகிறேன்- 
கண்முன்னே என் காதல் 
எரிய காண்கிறேன் - உன்  
மண ஓலை கண்டு!

வருகிறேன் நானும் 
உன்னை மணமகளாய் காண..
மணமேடை ஏறுகிறாய் நீ

மண்டபத்தின் ஓரமாய் - உன்னை
ரசித்த வண்ணம் நான்.. 
வலிகள் இருந்தும்..!

கண்முன்னே என் காதல் 
எரிய கண்டேன்!!
எறிந்த சாம்பல் அள்ளி பூசுகிறேன்
நானும் சிவனாகிறேன்!!
என்னில் பாதியாய் என் காதல்!!

ஆம்!மறக்க வேண்டிய 
மணித்துளிகள்  தாம் அவை!!
வலிகள் இருந்தும் 
ரசிக்கிறேன் நான்..

பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்
உன் காதலை 
என்றும் உனக்காக.. 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

Friday 1 April 2016

காலங்கள் -காலமாகி போனது!


உடன் வரவே நீ இருக்க..

உன் சுவாசம் தேடி ஓடி
நான் வந்தேன்
உடன் வந்தோரை உதறிவிட்டு!

காற்றின் கரிசனத்தில்
காதோரோம் வந்த செய்தி
அறிய கண்டு...


காதல் கரையோரம்
மனம் நனைய கொண்டேன்
உன் நினைவை கொண்டேன்..!

கண்ணும் களவுமென
மற்றோர் கண் மறைத்தே
கவனமென யாவும் நாம் செய்ய...


ஆயினும்..
யாவரும் கள்ளத்தனம்
உணரக்கண்டு..


ஒதுங்கியே உரையாடினோம்
உள்ளுக்குள்ளே..

பார்வை பரிமாறினோம் நெஞ்சுக்குள்ளே.. 


போதும் இது-என 

தனியனவே நானும் இருந்த
காலங்கள் -காலமாகி  போனது!
துணையெனவே வர துடிக்கிறோம் நாம்!


விழிகள் பேசும் காதலால்..


வண்ண தூரிகை வரைந்த 

வானவில் மேகமாய்..
வண்ணங்கள் பூசிய உன் கூந்தல்!


வேகமாய் என் நெஞ்சுக்குள்
காதல் மழை பொழிய.. 


உன் மொழிகள் புரிவதில்லை..
என ஒரு போதும் தெரியவில்லை !!


உன் விழிகள் பேசும் காதலால்..!