Thursday 13 August 2015

சலாம் கலாம்!!


குடும்ப சூழல் காரணமாய்
உன் சிறு வயதில் வீடு தோறும்
சென்று தினசரி நாளிதழ் விநியோகம் செய்தாய் நீ

இன்று அணைத்து நாளிதழ்களும்
உனை பற்றிய செய்திகளால்
தங்களை விநியோகம் செய்து கொள்கின்றது
இருந்தும் நீ எளிமையின் உருவமாய்!

சிறு வயதில் கனவுச்சிறகுகள் மூலம்
வானவீதியில் உலாவந்த நீ
சிறகுகள் இல்லாவிட்டால் என்ன…
நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்
என முடிவும் கொண்டு


இன்று ஏவுகணைகள் மூலம்
நாட்டிற்கு பெருமையும் நற்பெயரையும் ஈட்டி
நீயும் பல புகழ் உச்சியும் எட்டி
ஆயினும் தன்னடக்கத்தோடு நீ

ஏவுகணையின் சாதனைகள் தந்த
சந்தோசத்தை விட
சாதனையின் இடையில் ஊனமுற்றோருக்கு
எடை குறைந்த கருவி வடிவமைத்த
உன் அன்பிற்கும் பண்பிற்கும் நீயே இணை

உங்கள் இழப்பில் உலக அறிவியல்
ஓய்ந்தது என்று நாங்கள்
ஓய்ந்துவிடப்போவதில்லை!

நம் இந்திய இளைஞர்கள் அனைவரின்
இதயத்தில்
நீங்களும் உங்கள் கனவுகளும் விதைக்க பட்டுள்ளது

சமுதாய மாற்றம் தரும் பல கனவுகள் காண
சொன்ன உங்களின் கனவு நினைவாகும் வரை
எங்களுக்கு இனி விடியல் இல்லை

உன் கனவிற்கு முடிவென்பது இல்லை
எங்கள் தலைவனே!

-இவன்
நீவிர் விரும்பிய இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி!! 

Wednesday 12 August 2015

யாவருக்கும் நலம்!


தொட்டு விட முடியாது என் புரியும் வேளையில்
எட்டி பிடிக்க முயற்சிக்காமல்
செவ்வனே விட்டு விலகி
செல்வது யாவருக்கும் தரும் நலம். 

உன் காலடியில்



நாம் பிரியும் ஒரு நன்னாளில்
யாதுமாகவும் நான் இருக்க..
என்றொரு வரம் வேண்டி நீ நிற்க!

யாதுமாக வருவதை விட உன்
கணவனாய் வருகிறேன்
என்று என் மனம்
நான் உரைக்க!
மௌனம் உதிர்க்கிறாய் உன் பதிலாய்..

அந்நொடியில் உதிர்ந்து போகின்றது
என் வாழ்கை
உன் காலடியில்.... 

Tuesday 11 August 2015

தொலைந்து போகின்றேன்



உன் வாழ்கை மாற்றங்கள் 
எனக்குள் வலிகள் பல தந்தாலும்,

உன் வார்த்தையின் தேற்றல்களில் 

சமாதானம் ஆகின்றேன்.. 

உன் வார்த்தையில் மாற்றங்கள் 

காணக்கண்டால், 

உன் வாழ்கையில் நான் 

தொலைந்து போகின்றேன்...  

மீழும் வ(ழி)லி..


உன்னிடம் என் காதல் 
சொல்ல வந்த போது 
மீண்டும் காதலா என்று என்னுள் 
தோன்றாமல் இல்லை.

இல்லை இதுவும் என்று அறிந்த 
அந்த ஒரு நிமிடம் 

மீண்டும் நான் மீண்டு வர வேண்டும் 
இந்த வலியில் இருந்து
என்று என்னுள் 
தோன்றாமல் இல்லை.

மீழும் வழி மட்டும் தோணவில்லை!

ஒரு நாள் ஒரு போதும்!!



உள்ளம் முழுதும் உன்னிடம் வசமாக 
நான் என்ற சொல்லின் அர்த்தம் மறந்து 
நீயாகி பல நாள் ஆயிற்று.. 

இனி ஒரு நாள் ஒரு போதும் இப்பொழுது 
மீண்டும் வாராது
நம் இருவருக்கும்...
நீயும் நானும் நாமாய் ஆக 
ஏற்ற ஒரு தருணம்!!

ஆகவே உன்னிடம் நான் யாசிக்கிறேன் 
நம் வாழ்கையை!! 

Friday 7 August 2015

மாற்றம்!!



மத மாற்றம் கூட தண்டனைக்குரியது அல்ல 
காதல் கொண்ட பின் 
சற்றென்று மாறும் இந்த நவ நாகரிக
பெண்களின் மனமாற்றம் தான் 
நிச்சயமான தண்டனைக்குரியது!! 

Thursday 6 August 2015

ஒருபோதும்..



அவ்வளவு எளிதில் 
இனி  யாருடைய அன்பிற்கும் 
அடிமையாவதும் இல்லை 
ஆட்கொள்ளப்படுவதும் இல்லை.

பெரும் பொய்!!!




நித்தமும் என் நினைவில் 
நீயே இருப்பதினால்
உன்னை பற்றி சிந்திப்பதாய் 
நான் சொல்வது - ஆக 
பெரும் பொய்!!

இயலாமையின் சாட்சி!



முன்பின் அறியா, முழுவிவரம் தெரியா 
முகம் தெரியா, குணமும் தெரியா 
ஒருவன் இனி உன் மணவாளன்..

அவனோடு தினம் வாழும் 
உன் மனம்  
இன்றில் இருந்து -என்று அறிந்து 
நான் படும் வேதனை..

உன்னோடு, 
ஏன் யாரோடும் 
நான் சொல்ல இயலாது..

எனது இயலாமையின் மிச்சத்தின் 
சாட்சி நீ மட்டுமே...

சேவை!!


நீ திருப்தி அடையாமல் 
திருப்பி அனுப்பிய 
என் காதல் - இன்றோடு 
தன் சேவையை நிறுத்தி கொள்கின்றது!.

Monday 3 August 2015

உன்னுள்ளே.


மறந்தும் மருந்திற்கு கூட 
இனி பெண் வாசம் நுகரமாட்டேன்...
விரும்பும் மனதை  
கட்டி கொள்ளவும் முடியாமல் 
விட்டு தரவும் முடியாமல் 
உன்னையும் நோகடித்து 
நானும் கொஞ்சம் கொஞ்சமாய் 
நொறுங்கி போகின்றேன் உன்னுள்ளே. 

இருள் காலம்!




என் வாழ்கையில் 
நான் தடுமாறி தடம்மாறிய 
இருள் காலங்களில்- சிறு 
மெழுகுவர்த்தி ஏற்றாத யாரும் 
என் இறுதி சடங்கிற்கு தீப்பந்தம்
ஏந்த தேவை இல்லை!!!!!!.