Thursday 21 July 2016

அடுத்த விடியலுக்குள்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்
இந்த நொடியில்..!

ஏன்?
யாருக்காக?
அடுத்த விடியலுக்குள் 
இது சாத்தியமா?

ஆனாலும் அந்த 
புதிய விடியலின் 
கிழக்கு பொழுதுகள் 
வெண்கதிர்களால் வெண்சாமரம் 
கொண்டு இயற்கையை 
தாலாட்ட துவங்கும்முன்

என்னுள் உள்ளவையெல்லாம் 
அறுத்தெறியவேண்டும்!

எச்சில் இலையாய் 
என்னை சுமந்து வந்து
இங்கே கொட்டியது யார்!

அறிவேன் நானும்
நான் மட்டுமே மூலகாரணம் 
என்று!

என் காதல் மட்டுமே 
எல்லா ரணங்களுக்கும்
ஆகா பெரும் தொடக்கம்!!
நானும் குழந்தைதானே 
உன் மடியில்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்.
அடுத்த விடியலுக்குள்!!

நெகிழ்ந்த நினைவுகள்..!

நெருக்கம் கூடி
நெஞ்சம் தேடிய நின் 
பார்வைகள் 
அறிவோம் யாமிருவரும்..! 

நிற்கின்ற இடம்தனின் 
நிரந்தரம் புரியாமல் 
காற்றும் கூட வித்தியாசம் 
காட்டுகிறது!

சுற்றம் மறைத்து 
சூழல்கள் மறந்து 
நாமாய் நம்மை சுற்றிய 
நிமிடங்கள்!

என் எல்லைகள் 
தாண்டிய 
விபரம் அறிகிறேன் 
உன் வார்த்தை தீண்டல்களில்!

நெருடல் கூடி உயிர் 
நடுங்க நானும் 
நீயும் பேசினோம் 
தனித்தனியே!

முன்னின்று நான் நிற்க 
திரும்பிய திசைகளில் 
புரிகிறது என் நிலைமை!

பரிகாசம் கூறும் பார்வைகள் 
மத்தியில் கூனி 
குறுகலானேன்!

சுற்றார் பார்வைகளில் 
ஏளனம் கண்டு 
ஏமாற்றம் கொண்டேன் 
ஏன் மாற்றம் கொண்டேன்!

அடி முன்னெடுக்க 
ஆயிரம் யோசனைகள் 
என்னோடே!

கண்டால் தானே சோகம் 
கேட்டால் தானே கோவம் 
உரையாடினால் தானே 
உதாசீனங்கள்!!

சிறிதே ஆயினும் 
மறந்தா போய்விடும்
நாம் சிரித்து மகிழ்ந்த 
அணைத்து நெகிழ்ந்த 
நினைவுகள்!

உன் அவன் காணாமல் போனான் 
என் அவள் தொலைந்து போனால்!
இனி 
அழுகைகள் இருவரோடும் 
இரு நெஞ்சின் வேரோடும்!

Wednesday 20 July 2016

அவதாரம்..!

முதல் முறை 
உன் முன் 
அவதாரம் பூசிய 
என் முகம்!!

சங்கடம் மறைக்க  
பூசிய சந்தோசம் 
சற்றே கூடி என்  
முகத்திரை கிழித்திட 
தடுமாறி தான் 
போனேன் நானும்!

கதை புரிந்துவிடும் 
இனி ஏதும் 
கூறிட வேண்டாம்! 
இக்கவிதையிலும் தான்!

முதல் முறை 
அவதாரம் பூசிய என் முகம் 
மேடை ஏறிய என் நடிப்பு 
முகத்திரை கிழிக்காமல் 
இருந்திடட்டும்
கவிதையிலேனும்!!

காதல் குழந்தை!

நேரக் குறைவின்
காரணமாய்
என்னை அறியாமல்
தலைவிரித்து சாமியாடும்  
என் காதல் தனை

பக்தியென பார்ப்பதும்
பயமென ஒதுக்குவதும்
உன் பார்வை
தேர்வுகளில் உண்டு!

இனியேனும்
என் காதல்
குழந்தையோடு சண்டையிடாதே
உன் அணைப்புகளில்
அதன் கண்கள் கண்டதுண்டா!

பேச முயன்று உழன்று
தோற்று போன வார்த்தைகள்
யாவும் விழி வழி வெளியேறி
உன் நெஞ்சு கூட்டுக்குள்
இறங்குவதை!

இல்லையெனில்
அடுத்த நெருக்கங்களில்
கண்கள் பார்த்து கொண்டே
கட்டி அணை!

சூரியனின் பிரகாசங்களும்
நிலவின் குளிர்ச்சியும்
அதனின் நீ காண்பாய்!

உன் கோவங்களில்
பிரிவின் அச்சம் கொண்டு
பரிதவித்த
காதல் குழந்தையின்
கண்களில்
நயாகரா நீரூற்று
ஓடியது நிஜம்!

உன் அருகாமைக்காக
மட்டுமே சத்தமிடும்..
ஒரு பொழுதும்
நெறியற்ற எண்ணங்களின்
வாள்களோடு அல்ல!

உன்னோடு நான் வாங்காமல்
மிச்சம் விட்டிருக்கும்
சிறு சிறு
யாவும் என் நியாபக
துளிகள் உனக்காக!

ஒரு போதும் கொணர்ந்திடாதே
மீண்டும் என்னிடத்தில்!

பிரியும் நாளில் இருந்து
நான் அழ போகும்
நிஜம் யார் அறிவார்
யார் எனை தேற்றுவார் 
உனை தவிர!

Tuesday 19 July 2016

ஓர் புள்ளியில்!!


ஏதோ ஓர் புள்ளியில்
ஒன்றென இருந்து
பரிச்சயம் அற்று
பரஸ்பரம் பேசாது
கடந்து போன நாம்!

காலங்களும் நாடுகளும் கடந்து
காரணங்கள் அற்று
உறவென ஆனோம்- நட்போடு!

புரியாத பிரியம்
எப்போதும்
பிரியும் போது புரியும்!
இப்போது உன் அன்பில் புரிகிறது!
உறவென மட்டும் அன்றி
உணர்வெனவும் உடன் வருகிறோம்!

பிரபஞ்சத்தின்
உணராத மிச்ச அழகும்
அறிந்திராத அதிசயமும்
ஆண் பெண் நட்பில்
ரகசியமாய் ஒளிந்துருக்கிறது!

வான் கொண்ட மட்டும்
நீளும் ஆகாயமாய்
நீளட்டும் நம் நட்பு!

பின்னாளில் ஓர் புள்ளியில்
சகிதம் அமர்ந்து
எண்ணிலடங்கா வானத்து
நட்சத்திரங்கள் என
நம் நட்பின் நினைவுகள்
எண்ணிடுவோம்!

அறிமுகம்!!

முகம் பழகி ஆண்டுகள்
பல தேய்ந்திருந்தாலும்
அறிமுகம் ஆகி அரை திங்கள்
ஆகாத வேளையில்
இனமறியா உள்ளுணர்ச்சி நம்மோடு!

மென்சிரிப்பு கொண்டு நீயே
தொடக்கினாய்!
ஆழ் சிந்தனை கொண்டு
விலகியே நடந்தேன்!

எண்ணப் புள்ளிகள் ஒற்றுபோக
ஒற்றை கோடுகளில் பயணிக்கும்
இதயங்கள் இணைந்தது நட்போடு!

உன் அருகாமையில்
என் துன்பங்கள் துளிர்பதில்லை!
உன் தோழமையில்
என் தோள்கள் சாய்வதில்லை!

வருந்துகிறேன் இந்நேரம்
முகத்திற்கும் அறிமுகதிற்குமான
கால இடைவெளி குறித்து!

Monday 18 July 2016

முடிவுகள்..!


சமாதானங்கள் தோற்று 
போன சம்மதங்கள் 
உன் வார்த்தைகளில் 
தெரிகிறது!

தோற்று போனது 
உன் சமாதானங்களா 
இல்லை நம் காதலா!

நம்மிடையில் வெற்றிடம் 
தேடி  - வெறுத்து 
போன காற்று 
இடையில் புக வழி அன்றி 
தாண்டி செல்லும்!

இடைவேளை அற்ற 
நம் பேச்சுகளில் 
பாதைகளின் தூரங்கள் 
தோற்று போகும்!

இன்றோ 
தனியென கொண்ட நேரங்கள்
ஊமைகளாகி 
போன இதயங்கள் 
பேசாது விட்டு சென்ற 
வார்த்தைகள் 
நடைபாதையில் கேட்பாரற்று!

நடை பாதை நீளங்கள் 
வலிகள் தருகிறது
இதயங்களோடு சேர்த்து 
கால்களிலும்!

முடிவுகள்
சில நேரங்களில்  பேசி 
எடுக்கப்படும் 
சில நேரங்களில் பேசாமல் 
முடிந்துவிடும் வாழ் நாள் முழுதும்!

இக்கணம் உன் மனம் 
என்னை வேண்டுதோ 
இல்லை 
என்ன வேண்டுதோ என 
எண்ணிட தோணுது!

வெறுத்திடாமல் 
பொறுத்து இருக்கிறேன்!

பெண்ணினமே..!

இது போதுமா?
இது போதுமே
இன்னும் வேணுமா?
இன்னும் பட்டாலும் திருந்தா
என் மனமே..

வேண்டாம் நீ
என்று கூறிய வார்த்தை
உன் வாயிலாக..
வாயில் அதுவாக
செல்கிறேன் நான்
உன் வாழ் விட்டு..!

போதுமே இதுவும்
இதற்கு மேல் என்ன
வேண்டிடும் என் மனமே

பட்டது போதும்
பாச பட்டினி வாழ்வு
தான் இனி தினமே...

உன் பார்வைகள் அற்ற
வார்த்தைகள் சுட்ட
வாழ்வு தான்
இனி எனதே..!

பட்டவை யாவும்
கற்றவை தானே
இன்னும் திருந்தா ஜென்மமே...!

இச்ஜென்மமும் போதுமே
இந்த வாழ்வும் போதுமே
பெண்ணினமே என் வாழ்வில்
இனி வேண்டாமே..!

நீயும் கூட பிரிவாய்
என புரியா
என் மனமே..

பட்டாலும் சுட்டாலும்
திருந்தா உயிரே
உயிர் பிரியட்டும்
நம் நினைவோடே!

Friday 15 July 2016

உயிர் தங்கிடாது!

என் தினசரிகளின்
தொடக்கங்களும் முடிவுகளும்
உன் குரலோடும்..
சில நேரங்களின்
விழியோடுமாய்..
இன்பங்கள் சுமந்த என்
பசுமை நாட்கள்!!

குரல் கேட்டு
விழி கண்டு
உயிர் தீண்டி
மாதங்கள் ஓடிற்று...

அதிக நேரங்களில்
என் தனிமையில்
உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து
குரலொலி காதுகளோடு
நானும் அசை போடுகிறேன்...

நாளை கண்விழிக்கையில்
இவை யாவும்
கனவாக - நீ என் அருகே
இருந்திட கூடாதோ
என்றெண்ணாத நேரங்கள்
இல்லை!

அநேக நேரங்கள் இல்லாமல்
போயினும்
எப்போதேனும் நீயும்
என் போல்
எண்ணியதுண்டோ!

என் புன்னகை வேண்டி
பொய்யுரைத்திடாதே!!
மற்றோர் ஏமாற்றம்
தாங்கி என் உயிர்
தங்கிடாது!

உன் பிரிவின் துயரமே
போதும் என் உயிர்
பிரிய!!!

Wednesday 6 July 2016

பரிசு..!!


பொழுதுகள் போகாமல்
தனிமையின் வெறுப்புகளில்..

பொழுதுகள்
கழியுமென்றெண்ணி
ஒரு பொழுதுகளும்
கண்ணீர் விட்டு அழுததில்லை!!

பிரிந்து செல்கையில்
என்னோடு நீ தந்து சென்ற
பரிசு
கண்ணீர் மட்டும் தான்!!

பிரித்து பார்க்கிறேன்
என் கண்கள் விட்டு
தினமும்
நீ தந்த பரிசை!!

Tuesday 5 July 2016

என் ஆவாய் நீயும்!!


உன் வார்த்தைகள்
செவி சேரும் முன்
வழிமொழிந்த விழியின்
சோகம் அறிவாய்
நீயும் நன்கு!

என் கண்ணீரில் மிதந்து
மிதந்து மின்னும்
காதல் கண்டு நீயும்
தான் கலங்கி போனாய்..!

பிரியும் போது என் ஆவேன்
என்று
புரியும் போது
என் ஆவாய் நீயும்!

மிச்சம் இருந்த
ஒற்றை கனவும்
வாழ்வின் பிடிப்பும்
காற்றோடு கலைந்து போக..

நிஜம் தொலைத்து
நிழல் பார்த்து
பழகும் காலம்
விரைவில்...

உன் புகைப்படம்!!!


நீ அந்நியமாகி போய்விட்ட
ஒரு நாளில்
ஏதோ தேடி அலைந்திட்ட
என் கண்ணில் 
சிக்குகிறது
உன் புகைப்படம்!

புகைப்படத்திற்க்கான சிரிப்பின்
அளவு தாண்டிய
உன் சிரிப்பு -  காட்டுகிறது
நம் காதலையும்!

காதலின் இருமாப்பில்
முடிவு செய்திருந்தோம் 
நம் திருமணத்தன்று தான்
முதலில் ஜோடியாய்
புகைப்படம் எடுப்பதென்று!

ஊடுருவி பார்க்கையில்
கண்ணாடி பிம்பங்களின்
தயவில் - என் பிம்பங்களும்
உன்னருகில் விழுந்திருக்கும்
விபரம் கண்டு
விஷமச் சிரிப்பு கொண்டோம்!

அன்றேனும்
உணர்ந்திருக்க வேண்டும்
உன் வாழ்வில் நிழல்
என மட்டுமே 
வருவேன் என்று!

ஆண்டுகள் ஓடி
துணை ஏதுமின்றி
வாழும் என்னை பார்த்து
விஷம சிரிப்பு
சிரிக்கும் உன் புகைப்படம்
விபரம் ஏதும் அறியாமல் நான்!!