Thursday, 7 April 2016

எப்பொழுதுகளிலும் ஒற்றை நிலவென நீயே என் வானில்!




கட்டவிழ்த்து விடப்பட்ட 
காங்கேயங் காளையென 
குதித்தோடி வரும் என் கண்கள் 
உன் திசை பார்த்து - தினந்தோறும்! 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

தனிமையில்  இரவில் - 
தலையனை நீயாக..
ஒத்திகைகள் ஓராயிரம் 
என் காதல் ஒப்புவிக்க..

கணக்குகள் நினைவில் இல்லை 
எதிர்பார்த்து காற்றோடு காத்திருந்த நாட்கள்..
காதல் உரைக்க எத்தனித்த தருணங்கள்..

எதிர் உன்னை பார்க்க 
ஊமையாகிறேன் பேதை நான்!

எப்படி அப்படி ஓர் அசட்டு 
தைரியம் என்னுள்..
புரியாத புதிராய் இன்றும்!!

மன ஆசை தொடுக்கிறேன் 
அழகாய் மறுத்து - உன் பாதை 
தொடர்கிறாய் !

வலிகள் இருந்தும்..
உன்னை ரசித்த வண்ணம் நான் !

நட்சத்திரங்கள் காணாமல் போக 
முழு நிலவென ஒளிர்கிறாய் 
என் வானில் அன்று!!

தயக்கம் கொண்டு 
தவிர்த்தே வருகிறேன் 
மறுமுறை உன்னிடம் வர..

காத்திருக்கிறேன் நான்!
காலம் கரைத்திடாதோ எண்ணி.
குருட்டு நம்பிக்கையில்..!

நாட்கள் நகன்றோடி
வருடங்கள் ஆயிற்று பல 
இன்றோடு!!

மருகி போகிறேன்- 
கண்முன்னே என் காதல் 
எரிய காண்கிறேன் - உன்  
மண ஓலை கண்டு!

வருகிறேன் நானும் 
உன்னை மணமகளாய் காண..
மணமேடை ஏறுகிறாய் நீ

மண்டபத்தின் ஓரமாய் - உன்னை
ரசித்த வண்ணம் நான்.. 
வலிகள் இருந்தும்..!

கண்முன்னே என் காதல் 
எரிய கண்டேன்!!
எறிந்த சாம்பல் அள்ளி பூசுகிறேன்
நானும் சிவனாகிறேன்!!
என்னில் பாதியாய் என் காதல்!!

ஆம்!மறக்க வேண்டிய 
மணித்துளிகள்  தாம் அவை!!
வலிகள் இருந்தும் 
ரசிக்கிறேன் நான்..

பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்
உன் காதலை 
என்றும் உனக்காக.. 

எப்பொழுதுகளிலும் ஒற்றை 
நிலவென 
நீயே என் வானில்!

Friday, 1 April 2016

காலங்கள் -காலமாகி போனது!


உடன் வரவே நீ இருக்க..

உன் சுவாசம் தேடி ஓடி
நான் வந்தேன்
உடன் வந்தோரை உதறிவிட்டு!

காற்றின் கரிசனத்தில்
காதோரோம் வந்த செய்தி
அறிய கண்டு...


காதல் கரையோரம்
மனம் நனைய கொண்டேன்
உன் நினைவை கொண்டேன்..!

கண்ணும் களவுமென
மற்றோர் கண் மறைத்தே
கவனமென யாவும் நாம் செய்ய...


ஆயினும்..
யாவரும் கள்ளத்தனம்
உணரக்கண்டு..


ஒதுங்கியே உரையாடினோம்
உள்ளுக்குள்ளே..

பார்வை பரிமாறினோம் நெஞ்சுக்குள்ளே.. 


போதும் இது-என 

தனியனவே நானும் இருந்த
காலங்கள் -காலமாகி  போனது!
துணையெனவே வர துடிக்கிறோம் நாம்!


விழிகள் பேசும் காதலால்..


வண்ண தூரிகை வரைந்த 

வானவில் மேகமாய்..
வண்ணங்கள் பூசிய உன் கூந்தல்!


வேகமாய் என் நெஞ்சுக்குள்
காதல் மழை பொழிய.. 


உன் மொழிகள் புரிவதில்லை..
என ஒரு போதும் தெரியவில்லை !!


உன் விழிகள் பேசும் காதலால்..!

Tuesday, 29 March 2016

ஒரு திங்கள்..!


சிறை வாசம் வந்து
ஒரு திங்கள் உருண்டோடிற்று
இன்றோடு.

காலம் கடத்திய என் காதலால்
காலம் கடத்தப்பட்டேன் நான்

காலத்தின் பிடியில் இருவரும்
வெவேறு திசையில்
இரு துருவமென பிரிந்தே
இருப்போம் இருவரும்
இனி பார்க்கா வண்ணம்!!

யாருமின்றி நான் இருப்பேன் என!!!


சற்றே தாமதித்தாலும் உன் 
விழித்திரையில் கண்ணீர் 
வழிந்தோடிவிடும் தருவாயில் 
அந்த இரவின் தனிமையில் நீ!!

தூரத்தில் என் உருவம் கண்டு 
கொண்ட அந்த ஒரு நொடியில் ..

தேங்கி கிடந்த உன் பயம் 
ஏங்கி தவித்த உன் பாசம் 
அனைத்தும் சேர்த்து 

என் விரல் இருக்கிய 
உன் விரல்களில் உணர்ந்தேன் 
யாதுமாகி நான் இருக்கிறேன் என்று..

ஒரு கணமும் உணரவில்லை 
இன்று யாருமின்றி நான் இருப்பேன் என..

அகதியென வாழும் வாழ்வு!


அழகனவே, அசல் 
அனைத்தும்  தொலைத்து 

இன்று 
நகல்களோடு நடை பிணமனவே  
நானும் வாழ்கிறேன்!!

மண்ணுக்குள் மண் புழுவுன  
என் தலை தாழ்த்திசெல்கின்றேன்..!

நானும் சிரிக்க மறந்து 
சில காலம் ஆயிற்று!

என்னிலை பற்றி தன்னிலை 
விளக்கம் தர கூட யாருமின்றி 
அகதியென வாழும் வாழ்வு!.

எப் பெண்பாலும் குறை 
கூறி பயனில்லை..

எனை நோக்கி குறியீடு 
கொண்டு 
வாழ்க்கை கேள்விக்குறியோடு 
வான் மறையும் நாள் நோக்கி..
நான்...

Thursday, 17 March 2016

வாழ்க்கை பரிசல்!!


தனியனவே ஒதுங்கி செல்கிறேன் 
ஓர் ஓரமாய்
என் வாழ்கை பரிசலில்..!

உடன் வந்தோர் அனைவரும் 
பாதியில் தான் 
பாதை மாறி சென்றோர் 
என் வாழ்க்கை பரிசல் விட்டு!!

எவர் பரிசலும் உரசாமல் 
உயிர் துடுப்பு ஏந்தி 
பயணம் செய்கிறேன்!!
தனியன தானே ஒதுங்கி செல்கிறேன்..

இருந்தும் அடிபடுகின்றேன் 
பெரிதாய் உடைபடுகின்றேன் 
நொருங்குகின்றென் பல நூறாய்...!!

கை தவறும் உயிர் துடுப்பு..
தனியன தானே நான் 
மறைந்து போகிறேன்..!!