Tuesday, 28 June 2016

யாரும் தவறில்லை!!!


நாளும் நகந்தோடி 
காதோரத்து 
நரை கூட சிரிச்சுருச்சு!

ஆனமட்டும் குழந்த 
மனசு தானம்மா!
அடிபட்ட மனசு 
அண்டிட அஞ்சுதும்மா!

வயலோரம் 
சோளக்காட்டு பொம்மை 
கண்ட பறவை போல 
நெருங்கிட நடுங்குதம்மா!

எட்டி நின்னு 
எதார்த்தம் பழகிட
எண்ணம் உதிக்குதும்மா!

கொண்ட சூட்டில் 
பட்ட பாடு பாடுறேன்மா!

தன்னிலை விளக்கம்
யாரும் தரதேவையில்லை!

ஏன்னா 
யாரும் தவறில்லை
யாரின் தரம் தேயவில்லை..!

தவறும் நானே
தவறி விழுந்தேன் தானே..
வலியின் சோகம் வேகம் 
தானே!! 

என் வருகையில்..!


மொழியற்று போன
மௌனங்கள் சொல்லும்
மனதோடு கொல்லும்
பிரிவின் வேதனைகளை!

பார்க்க நீ வேண்டி
பழகிய காலங்கள்..

ஏற்க மனமின்றி
எதற்கும் துணிவின்றி
எதிர்க்கும் துணையின்றி..

மாகாணங்கள் கடந்து
இருவேறு திசையோடு
இதயம் மறந்து
போன இரு மனங்கள்!

நயமெனவே பாவனைகள்
நம்மோடு
நான் ஊரோடும்
நீ வீடோடும் ஆக..!

நாளும் உன் நலம்
அடையாளம்
நான்  காண
பெரு வண்ணம்
உன் எண்ணம்
உணர்வேன் நான்..!

தொலைத்த காதல்
தொலைவோடு நான்!
ஏதொரு
பயனோ பலனோ
இனி இல்லை
என் வருகையில்!

புதையுண்டு போகட்டும்
கல்லறை குவியல்களோடு
நம்
காதலும்
உறவும்!

Wednesday, 22 June 2016

எங்கெங்கு நீ போயினும்..!



எத்தனை எத்தனை
அன்பளிப்புகளை
என்னின் நியாபகமாய்
கொணர்ந்து செல்வாய்
நீயும்..!

அத்தனைகளையும்
அப்புறப்படுத்திடு!!
எங்கெங்கு நீ போயினும்
என் முகமே மறந்த போதினும்

என்றேனும் மறவாது
கண்ணில் உனை ஏந்தி
நான் வழங்கிய
முதல் முத்தம்..

வாழ்வில் நீ வாங்கிய
முதல் முத்தம்!

கேளா யாசகம்...!


கேளா யாசகம் 
நானும் கொண்டு 
கொண்டேன் பெருந்துயரம் 
என்னோடு...! 

என்பால் சோகம் யாவும் 
பெண்பால் பாசம் கொண்டு 
என்பாள்  அவள்! 

அவளோடு நான் கண்ட
காதல் மாளிகை 
இன்று கனவு நாழிகைகளாய்..!

ஆண்பால் நானோ
அன்பால் இன்று  
அஃறிணை ஆகும் 
நாள் நோக்கி 
நிறைவு பயணம் 
நிறைவேறா ஆசைகளோடு..!

Tuesday, 21 June 2016

பாதரச கரைசல்..!


என் செய்வேன் நானும்
நம் காதல் மறவா
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை..

இன்று மட்டிலும்
என் முகம் காட்ட மறந்து!

ஒன்றெனவே  இருவரும்
இணைந்து
பொருத்தம் பார்த்து மகிழ்ந்த
நொடிகள் காட்டும்..!

நம் காதல் மறவா
என் வீட்டு நிலைக்கண்ணாடியை
என் செய்வேன் நானும்!!

பாதரச கரைசலில்
அதனின் கண்ணீர்
காண்கிறேன்
நம் முகங்கள் காணாது!

Monday, 20 June 2016

ஆசைகள்!!


சின்ன சின்னதாய் 
நிறைய ஆசைகள் 
என்னோடு..! 

எல்லா ஆசைகளும் 
உன்னோடு மட்டுமே
என்பதால் 

அதனின் சந்தோஷம் 
மட்டும் பெரியது!!!

Thursday, 16 June 2016

இனி நாம்...!


பக்கத்தில் தூரமாக
நெஞ்சோடு பாரமாக
இத்தனை நாளாய் நீ!

தூரத்தில் நான் உனது
எனதான வாஞ்சையில்
பேருருபம் கொண்டது
உன் மீதான என் பிரியும் !

எனதாகும் நாளின்
நீளம் அளக்கிறேன்!

அன்பின் பகிர்வில்
மகிழ்வோம் என்றென்றும்
இனி நாம்!