Wednesday, 18 February 2015

நினைவுகள்!!!




அன்பு உணர்த்திய உன் கண்கள்..
தொட்டும் விடாமல் விட்டும் விலகாமல்
இணைந்தே சென்ற நம் பாத சுவடுகள்..
கூச்சம் போக்கிய உன் குளிர் புன்னகை..
ஏக்கம் உணர்ந்த உன் விடுமுறை  பிரிவு..
பரஸ்பரம் நலம் விசாரித்த நம்  விரல்கள்..
சோகங்கள்  பகிர்ந்த உன் தோள்கள்..
இவை அனைத்துமாகி இருந்த  நான்!
இவையேதும் இன்றி 
இன்று தனித்து பயணிக்கிறேன் 
நினைவுகளின் உதவியோடு!!!

காதலர் தினம்!!




                                    உன்னால் அனாதையாக்கப்பட்ட 
                                    நானும் நம் காதலும் 
                                    காத்திருக்கிறோம்  காதலுடன்!
                                    உன்  காதலுக்காக...  

                                                                                    -இப்படிக்கு  
                                                                                       நம்  காதல்... 

Tuesday, 13 January 2015

உன் புன்னகை..


ஆயிரம்  நகைகள் அணிந்து
அழகாய்  நீ  நடந்து  வந்தாலும்
உனது புன்னகைக்கு ஈடாய்
எதுவும்  மின்னவில்லையடி

Monday, 12 January 2015

காதல் கைகள்..




எனக்கு  உன்னுடைய  
சமாதானங்கள் தேவை இல்லை 
தேவை  
உன்னுடைய சம்மதங்களும் 
உன்னுடனான சம்பந்தங்களும் மட்டுமே!

ஆகையால்,நான்!!!




அன்பே!! 
இதைத்தான்  நீ  
விரும்பிகிறாய்  என்றால் 
இனி  உன் விழியிலும் படுவதில்லை 
உன் நிழலையும்  தொடுவதில்லை...

நினைவு ஏணி....







தொட்டனை தூறும் மணற்கேணி 
சொல்லிவிட்டான் வள்ளுவன் அன்று..

உன்னை  தொட்டு  அணைத்த  நிமிடங்கள்  
எண்ணி  ஏறுது என் நினைவுகள்  
நம்  காதல்  ஏணி...

மகாகவி பாரதி பிறந்தநாள்!!! DEC-11



வாழ்க நீவிர்!!!

மறுபிறவி ஒன்று நீர் கண்டு 
உன் ஆசை கனவாய் நீ விரும்பிய  
புதுமை பெண்ணை கண்ணாரக்கண்டு 
அப்பெண்ணோடு காதலும் கொண்டு...

எங்கள் சோகம் அறிந்து உண்மை உணர்ந்து 
எழுதுவாய் நீயும் 
பல புரட்சிகரமான 
பெண்ணாதிக்க கவிதைகளை...