நடை பழகி தந்தேன்.
நல்ல உடை பழகி தந்தேன்..
நாம் விடை பெரும் நாள்
விரைந்து வருகின்றது.!
இனி எனது இந்த தனிமை
நடை பயணத்தில்
ஒரு போதும் எந்த ஒரு உயிர்க்கும்
கரம் கொடுத்து தூக்கி விட மாட்டேன் ..
கணம் தாங்காமல் அல்ல...
விடை பெரும் தருணத்தில்
உன் விரல் ஸ்பரிசம் தரும்
அந்த கடைசி சில நிமிட வலி தாங்க முடியாமல் ..
என் தனிமை பாதையில்
உன் கீதம் பாடி செல்கின்றேன் நான்...
என் மனம் படும் வேதனைகளை
எம்மொழி கொண்டு கவிதை அரங்கேற்றுவேன்!
என் விழி முதல் மொழி வரை
சிறைப்பட்டு இருக்க...
உன் காதல் இதயத்தில்..
தனிமையில் உன்னை நினைத்து..
தாய் பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தையென
அழுவேன் என ஒரு போதும்
சிந்தித்ததே இல்லை!!..
உன் பாசத்தின் வீரியம் புரியும் தருணம்
நீ என்னை விட்டு பிரியும் நாள்
தொடங்கியது..
உன் திருமண செய்தி அறிந்த நாள் முதல்
என் மரண செய்தி கேட்டு கடிதம் அனுப்புகின்றேன்
தினமும் எமனுக்கு
கையில் மதுகோப்பை ஏந்திய வண்ணம் !..
இன்னும் என்னை காயபடுத்தி
கொண்டு தான் இருக்கிறது
உன்னை காயப்படுத்திய நாட்கள்
விலகியே நிற்கிறேன்
உன் வாழ்வில் இருந்து
இனியும் உன்னை
வருத்த விரும்பாமல்.
ஒரு போதும்
இனி கிடைக்கபோவதில்லை
நீயும்
அந்த அழகிய பொழுதுகளும்
இனி யோசித்தும்
உன்னிடம் யாசித்தும்
யாதொரு பயனும் இல்லை.
யாரோ ஒருவனாய்
வருவதை விட
உன்னுடைய
இந்த பயணத்தில்
இனி நான் இல்லை-யாராகவும்..!
அன்பு உணர்த்திய உன் கண்கள்..
தொட்டும் விடாமல் விட்டும் விலகாமல்
இணைந்தே சென்ற நம் பாத சுவடுகள்..
கூச்சம் போக்கிய உன் குளிர் புன்னகை..
ஏக்கம் உணர்ந்த உன் விடுமுறை பிரிவு..
பரஸ்பரம் நலம் விசாரித்த நம் விரல்கள்..
சோகங்கள் பகிர்ந்த உன் தோள்கள்..
இவை அனைத்துமாகி இருந்த நான்!
இவையேதும் இன்றி
இன்று தனித்து பயணிக்கிறேன்
நினைவுகளின் உதவியோடு!!!
உன்னால் அனாதையாக்கப்பட்ட
நானும் நம் காதலும்
காத்திருக்கிறோம் காதலுடன்!
உன் காதலுக்காக...
-இப்படிக்கு
நம் காதல்...